பொதுஜன பெரமுனவின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் கைது

Report Print Sumi in சமூகம்

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு மதுபோதையில் நடமாடித் திரிந்த பொதுஜன பெரமுன கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வட்டுக்கோட்டைத் தொகுதியின் அமைப்பாளர் லோகநாதன் என பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது இவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.