பெந்தோட்டை மற்றும் பலப்பிட்டியவில் 336 பேர் சுய தனிமைப்படுத்தலில்

Report Print Steephen Steephen in சமூகம்
56Shares

பெந்தோட்டை மற்றும் பலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 336 பேர் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்துருவ சுகாதார பரிசோதகர் நிஹால் ரணசூரிய தெரிவித்துள்ளார்.

இவர்களில் 184 பேர் பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் 152 பேர் பெந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

இத்தாலி, பிரான்ஸ், மாலைதீவு, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் சுற்றுலா வழிக்காட்டிகளாக பணியாற்றும் நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ரணசூரிய கூறியுள்ளார்.

இவர்கள் குறித்து பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.