வவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் இடங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வவுனியா புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வங்கிகளிலுள்ள ஏ.ரீ.எம் இயந்திரங்கள், அலுவலகங்கள் என பல பகுதிகளில் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வவுனியா பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம் மற்றும் பிரதேச சபை சுகாதார துறையினர் இணைந்து பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கி செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், வீதிகளில் செல்லும் வாகனங்களை மறித்தும் நேற்று தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.