வீரகெட்டியவில் சுடப்பட்ட நபர் உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வீரகொட்டிய கெமேகல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இந்த நபர் முதலில் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சட்டவிரோத மதுபான விற்பனையாளர் எனவும் அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள குறுக்கு வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது பின்னால் வந்த இனந்தெரியாத நபர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைதுசெய்ய வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.