கிளிநொச்சியில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

Report Print Suman Suman in சமூகம்

கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சேவைச்சந்தை, பேருந்து நிலையம் மற்றும் தரிப்பிடங்கள், வங்கிகள் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அதிகளவான மக்கள் நடமாடியிருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கிகள் விசிறும் பணிகள் இன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.