மன்னாரில் அதிரடிப்படையினரால் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Report Print Ashik in சமூகம்
89Shares

மன்னார் நகர சபை பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் இன்று காலை முன்னெடுத்தனர்.

விசேட அதிரடிப்படையினருடன் மன்னார் பொலிஸார், மன்னார் நகர சபை, பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த பணியை முன்னெடுத்தனர்.

விசேட அதிரடிப்படையின் வடமாகாண பொறுப்பதிகாரி லயனல் குணதிலக்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த கிருமி நீக்கும் நடவடிக்கை இடம் பெற்றது.

இதன் போது வவுனியா விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டிப்தி கெட்டி ஆராய்ச்சி, மன்னார் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி மலன் பிகிராடோ மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிஸாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரதான வீதிகள் உற்பட மன்னார் பள்ளிமுனை பிரதான வீதி, மன்னார் வைத்தியசாலை பிரதான வீதி உள்பட பல்வேறு வீதிகளில் விசேட அதிரடிப்படையினரினால் கிருமி நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.