மன்னாரில் கிருமி நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை மன்னார் நகர சபை நேற்று முன்னெடுத்துள்ளது.

மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கிருமி நீக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையையும் தாக்கி வருகின்றது.

இந்நிலையில் மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபைக்குட்பட்ட வங்கிகள், தன்னியக்க பணப்பறிமாற்ற இயந்திரம் (ஏ.ரி.எம்), தபாலகம்,மாவட்ட செயலக பிரதான பாதை,பல்பொருள் விற்பனை நிலைய வீதி,பொலிஸ் நிலைய வளாகம் உட்பட மக்கள் பயன்படுத்துகின்ற முக்கிய இடங்களில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மன்னார் நகர சபைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை இல்லாது செய்ய கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.