ஹோமாகமை வைத்தியசாலை கொரோனா சோதனைக்காக ஒதுக்கம்

Report Print Jeslin Jeslin in சமூகம்
50Shares

ஹோமாகமை வைத்தியசாலையை முற்றாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிய பயன்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அவிசாவளை, பாதுக்க, கொஸ்கம, கரவனெல்ல, ஹொரணை, நவகமுவ, வேதர ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கின்றது என்ற சந்தேகம் இருந்தால், ஹோமாகமை வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் கொரோனா சம்பந்தமான தகவல்களை அறிந்துக்கொள்ள 1999 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.