பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

பல்கலைக்கழகம் ஒன்றில் நிர்வாகி ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் தீங்கை ஏற்படுத்தும் வகையிலான செய்தி ஒன்றை பேஸ்புக் ஊடாக பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கோட்டை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹரகம பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.