கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 22 கொரோனா நோயாளிகள்!

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 9 பேர் கொரோனா தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு மாவட்ட ரீதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு -22

களுத்துறை -14

கம்பஹா -10

புத்தளம் -9

இரத்தினபுரி -3

குருணாகல் -1

காலி -1

கேகாலை -1

மட்டக்களப்பு - 1

பதுளை - 1

யாழ்ப்பாணம் - 1

மாத்தறை - 1 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...