மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்!! எச்சரிக்கும் வைத்தியர்

Report Print Dias Dias in சமூகம்
3294Shares

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் போகுமாக இருந்தால் மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட போவது உறுதி என வைத்தியர் மதனழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டதில் வைத்து கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஏப்ரல் மாதம் தாண்டும் போது காலநிலை மாறும். அப்போது பிரச்சினை பெரிதாகும் நிலை தான் காணப்படுகிறது.

அவ்வாறு பிரச்சினை பெரிதாகுமானால் நான் சிறியதொரு கணக்கினை கூறுகின்றேன் அதன் மூலம் விபரீதம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டை அழிக்கும் போது 45 - 75 வீதத்திற்கு அந்த பாதிப்பு இருக்கும். குறைந்த பட்சம் 40 வீதமானவர்கள் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என எடுத்துக் கொண்டால் ஆறு/ ஐந்து லட்சம் மக்கள் இந்த மாவட்டத்திலே இருக்கின்றார்கள். அப்படியாயின் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட போவது உறுதி இந்த பரவலை தடுக்க முடியாமல் போகுமாக இருந்தால்.

அந்த இரண்டு இலட்சத்தில் என்பது வீதமானவர்கள் பேசாமல் இருப்பார்கள். எனினும் எஞ்சியிருக்கும் நாற்பதாயிரம் பேருக்கும் வைத்தியசாலையில் விடுதி வசதி வேண்டும்.

இப்பொழுது இருக்கும் நிலையில் மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையில் ஆயிரம் கட்டில்கள், வெளியில் இருக்கும் அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்த்து எடுத்தாலும் இன்னொரு ஆயிரம் கட்டில்கள். மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் கட்டில்கள்.

இந்த நாற்பதாயிரம் பேரில் பதத்தாயிரம் பேருக்கு நாம் அவசர சிகிச்சை பிரிவிற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் தற்போது எமது நிலவரத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 பேருக்கு தான் அவசர சிகிச்சை பிரிவில் இடம் கொடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.