வவுனியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 137பேர் தனிமைபடுத்தலில்

Report Print Theesan in சமூகம்

கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாமென்ற சந்தேகத்தில் வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்களில் 137 பேர் தனிமைபடுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும், செட்டிகுளம் பிரிவில் 17 பேரும், வவுனியா வடக்கில் 8 பேர் மற்றும் யாழில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேர் உட்பட 137 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனை விட வெளிநாட்டில் இருந்து வருகை தந்த விமானபயணிகள் 538 பேர் வவுனியா மாவட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா,பம்பைமடு இராணுவ முகாமில் 212 பேரும், பெரியகட்டு இராணுவமுகாமில் 120 பேரும்,பூவரசங்குளத்தில் 206 பேரும் என 538 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.