இத்தாலியில் இலங்கையர் உயிரிழப்பா? வௌிவிவகார அமைச்சின் புதிய அறிவிப்பு

Report Print Rakesh in சமூகம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளது என வௌிவிவகார அமைச்சுதெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இத்தாலி ஊடகங்களில் மாத்திரம் தகவல் வௌியாகியுள்ளது என வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி தெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் இதுவரை உறுதியாகவில்லை என ரோமுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.