திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோய்க்குரிய அறிகுறிகள் காணப்படும் நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தமது வீட்டினை வழங்கியுள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந்திடம் இன்று (25) இவ்வீடு கையளிக்கப்பட்டது.
இதேவேளை பொது இடங்களில் தொற்று நீக்கும் விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவரது சொந்த நிதியுதவியுடன் கிருமி நாசினி தெலி கருவிகளையும் அனைத்து பிரதேச சபைகளுக்கும் வழங்கி வைத்தார்.
அத்துடன் திருகோணமலை, கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும் "கிருமி நாசினி தெளிகருவி" வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
