நாட்டில் கொரோனா தொற்று அச்சம்! மக்கள் ஒரு வேளை உணவிற்கு படும் வேதனை

Report Print Sujitha Sri in சமூகம்
809Shares

மொத்த இலங்கையையும் கொரோனா வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்பட்டுள்ள அச்சமும் முடக்கி போட்டுள்ளது.

மருத்துவதுறையினர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர்த்து ஏனைய பொது மக்கள் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பொது மக்களை வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கையிருப்பில் பணம் இருப்பவர்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வீடுகளில் வாங்கி குவித்துள்ளனர்.

இல்லையெனில் ஓரளவிற்கு சமாளிக்கும் வகையிலாவது பொருட்களை வாங்கியுள்ளனர்.

ஆனால் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் மற்றொரு சமூகம் நாளாந்த உணவிற்கு வழியின்றி, சொல்ல முடியாத சோகத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிலும் கொடுமையென்னவெனில் உணவாக வெறும் பலாக்காயை மட்டும் உட்கொண்டு வருகின்றனர்.

இதனால் வயதானோர்கள், குழந்தைகள் ஆகியோரின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை நினைத்து கவலை கொள்வதா இல்லையெனில் உணவின்றி அல்லல்படும் இந்த மக்களை நினைத்து கண்ணீர் விடுவதா என்பது கேள்விக்குறியே.

என்ற போதும் தம்முடைய நிலையை வெளிப்படுத்த முடியாத இன்னும் பல கிராமங்கள், மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது எமது அரசாங்கத்தினது மட்டுமல்ல இலங்கை மக்களாகிய எம் ஒவ்வொருவரினதும் கடமையே.