கொரோனாவுக்கு இலக்காகும் இளவயதினர் - பிரித்தானியாவில் 21 வயது யுவதி மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் குறைந்த வயதில் உயிரிழந்த முதலாவது பெண்ணாக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த Chloe Middleton என்பவரின் குடும்பத்தினர், இந்த மரணத்தை சமூக வலைத்தளம் ஊடாக உறுதி செய்துள்ளனர்.

கொரோனா வைரஸின் பாதிப்பை உணராதவர்களுக்கு இந்த பதிவு தெளிவுபடுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக Chloe Middletonஇன் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தொற்று நோய் பரவாமல் இருக்க அனைவரும் வீட்டில் இருக்குமாறு பொது மக்களிடம் இந்த குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளியிட்ட பதிவில், “இது சாதாரண வைரஸ் என நினைப்பவர்கள் மீண்டும் சிந்திக்க வேண்டிய தருனம். எனது தனிப்பட்ட அனுபவத்தில் கூறிகிறேன் இந்த வைரஸ் 21 வயது மகளின் உயிரை பறித்து விட்டது.

“எங்கள் மகளுக்கு எவ்வித உடல் உபாதைகளும் இருக்கவில்லை. அவர் ஆரோக்கியமாகவே இருந்தார். அதிக வேதனையுடன் எங்கள் மகள் உயிரிழந்தார். தயவு செய்து வீட்டில் இருங்கள். சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கமைய நடந்து கொள்ளுங்கள் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என யுவதியின் உறவினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இளம் வயது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.