இலங்கையில் கொரோனாவின் தீவிரம் - skype ஊடாக வழக்கு விசாரணைகள் - விடுதலையான கைதிகள்

Report Print Vethu Vethu in சமூகம்
168Shares

தென்னிலங்கையில் ஸ்கைப் ஊடாக இன்று வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

காலி நீதிமன்றத்தில் சிறிய குற்றச்சாட்டுக்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 கைதிகள் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காலி பிரதான நீதவான் கெக்குனவெல இன்று குறித்த கைதிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீதவான் முன்னால் ஸ்கைப் ஊடாக கைதிகள் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நீதவான் தனது உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் இவ்வாறு ஸ்கைப் ஊடாக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.