பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ள தொலைபேசி இலக்கங்கள்

Report Print Ajith Ajith in சமூகம்
156Shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் நீடித்துவரும் ஊரடங்கு சட்டத்தின்போது மின்சார தடங்கல், நீர் விநியோகத் தடங்கல், மருந்துகள் உட்பட்ட அவசர தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

0112444480 அல்லது இறுதி இரண்டு இலக்கங்களுக்கு பதிலாக 81 அல்லது 119 என்ற இலக்கங்களே வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைமையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனைக் குறைப்பதற்காகவே இந்த அறிவிப்பை பொலிஸார் விடுத்துள்ளனர்.