ரின் மீன் மற்றும் பருப்பு என்பவற்றை பதுக்கியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கள்ளிகுளம் பகுதியில் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் உணவு மற்றும் பருப்பினை பதுக்கிய வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சில அத்தியாவசிய பொருட்களின் விலையினை அரசாங்கம் குறைத்துள்ள நிலையில் அவற்றினை பதுக்கும் செயற்பாடுகளில் சில வியாபார நிலைய உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவற்றை கண்காணிக்கும் செயற்பாட்டில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி நிலாந்தன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றையதினம் கள்ளிகுளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதாக கிடைத்த தகவலிற்கமைய அங்கு சென்ற பாவனையாளர் அதிகாரசபையினர் குறித்த வியாபார நிலையத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அதிகளவான தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் உணவு மற்றும் பருப்பு ஆகியவை பதுக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த வியாபார நிலைய உரிமையாளரிற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யபட்டுள்ளதுடன், பண்டாரிக்குளம், திருநாவற்குளம், ஓமந்தை, பட்டாணிசூர், கூமாங்குளம் போன்ற பகுதிகளில் அத்தியவசிய பொருட்களை அதிகவிலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.