ஊரடங்கு சட்டத்தை மீறிய 3000 பேர் கைது! 729 வாகனங்கள் பறிமுதல்

Report Print Murali Murali in சமூகம்

ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி செயற்பட்ட சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 729 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பது, மக்களின் நலனுக்காக எனவும், அனைவரும் வீட்டினுள்ளேயே இருந்து அதனைக் கடைப்பிடிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதானது, பிடியாணை இன்றி கைது செய்யப்படும் குற்றமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.