கொரோனா கட்டுப்பாட்டுக்கான மீளாய்வு கூட்டம்! 145 வெளிநாட்டவர்களை கண்காணிப்பில் வைக்க தீர்மானம்

Report Print Vanniyan in சமூகம்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்முனை பிராந்தியத்தில் முடங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தொடர்பாக விபரங்கள் சேகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு வருகை தந்த 145 பேரையும் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனிடையே, மேலதிக விடயங்களை அறிந்துகொள்ள கல்முனை மாநகர சபையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.