உணவின்றி தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வைரஸ் அச்சம் காரணமாக தமது நாடுகளுக்கு செல்ல முடியாது ஹிக்கடுவை சுற்றுலா பிரதேசத்தில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் தமக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஹிக்கடுவையில் சுற்றுலா ஹொட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் கொரோனா அச்சம் காரணமாக எவரும் வெளிநாட்டவர்களுக்கு உணவுகளை வழங்க முன்வருவதில்லை என்பதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அப்படியான நிலைமையில் நேற்று பிற்பகல் ஹிக்கடுவை பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த சூன் பாண் வண்டி ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் உணவுகளை கொள்வனவு செய்துள்ளனர்.

Latest Offers

loading...