பனிச்சங்கேணி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 34 பேர் விடுவிப்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு பனிச்சங்கேணியில் தனிமைப்படுத்தல் சோதனைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படாமையினால் மீண்டும் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பனிச்சங்கேணி கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் நேற்றையதினம் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் பேருந்து மூலமாக பனிச்சங்கேணி கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பேருந்து மூலமாக 34 பேரும், நீர்கொழும்பு, கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

பனிச்சங்கேணி கொரோனா தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 38 பேரில் 34 பேர் நேற்று விடுவிக்கப்பட்டதுடன் மீதமாக இருந்த நான்கு பேரும் புனானை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...