கொரோனா தடுப்பு செயலணியின் தற்போதைய நிலைமை தொடர்பான விசேட கூட்டம்

Report Print Rusath in சமூகம்

கொரோனா தடுப்பு செயலணியின் தற்போதைய நிலைமை தொடர்பான விசேட கூட்டம் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும், செயலணியின் தலைவியுமாகியகலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும், அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பு வைத்திருந்த 159 நபர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை எவருக்கும் எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை எனவும் இவர்கள் முறையாக பொதுச் சுகாதாரப் அதிகாரிகள், பொலிசாரினாலும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர் என்பதுடன், இவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையவுள்ளது எனவும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏம். அச்சுதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களான பொதுச்சந்தைகள், சுப்பர்மார்கட், பஸ் நிலையங்கள், வங்கிகள் போன்ற இடங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்திற்கு முன்பும், பின்பும் கிருமித் தொற்று நீக்கம் செய்ய பிராந்திய சுகாதாரப் பணிமனை, மாநகர சபை நடவடிக்கை எடுத்தல்.

அத்துடன் மக்கள் கூடும் இடங்களில் சனநெரிசலாவதைக் கட்டுப்படுத்தி பரிந்துரைக்கப்பட்ட இடவெளியினைப் பேணுவதற்கு ஏற்ற வகையில் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளல்.

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் உணவு மற்றும் அத்தியாவசிப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மாத்திரமே திறக்கப்பட வேண்டும் என்பதுடன், துணிக்கடைகள், ஹாட்வெயார்கள், நகைக்கடைகள் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியிலும் மருந்து விற்பனை நிலையங்கள் திறந்திருக்கலாம் என்பதுடன் அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்ய வரும் பொதுமக்கள் வைத்தியர் வழங்கிய மருந்துச்சீட்டு அல்லது கிளினிக் கொப்பி அல்லது வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகளின் அட்டை அல்லது மாதிரிகளைக் காட்டி தேவையான மருந்துப் பொருட்களைப் பெற்றுச் செல்லமுடியும்.

அத்தியவசியப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக கொழும்பு போன்ற இடங்களுக்குச் செல்லும் வாகன சாரதிகள், வேலையாட்கள் போன்றோர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் பாதுகாப்பான முறையினைப் பின்பற்ற வேண்டும் எனவும், இதற்கான பாஸ் பொலிசாரினால் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் பாதுகாப்புப் பிரிவினர் அதனை கட்டாயப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு அணிபவர்கள் முறையான ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

உலக சுகாதரா அமைப்பின் அறிவுறுத்தல்களுக்கமைவாக பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசங்களே பாவிக்க வேண்டும் எனவும், அவை 6 மணித்தியாலங்களின் பின் முறையா அழிக்கப்பட வேண்டும் எனவும், தற்போது விற்பனையில் உள்ள கழுவிப் பயன்படுத்தும் முகக்கவசங்கள், துணிகளினால் ஆன முகக் கவசங்கள், கைக்குட்டை, துணிகளைப் பயன்படுத்துவது கிருமித் தொற்று படிந்து ஆபத்தினை ஏற்படுத்தும் எனவும் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் போக்குவரத்து செய்யும் அரச, தனியார் பஸ்வண்டிகளில் பொருத்தமான இடைவெளிகளைப் பேணி 20 பயனிகளை மாத்திரம் ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும், இது தொடர்பாக போக்குவரத்துப் பிரிவும் பொலிசாரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Latest Offers

loading...