கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்ட கிரிஸ்ட்சேச் படுகொலையின் குற்றவாளி

Report Print Ajith Ajith in சமூகம்

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேச்சில் கடந்த வருடம் இடம்பெற்ற பள்ளிவாசல் படுகொலையில் ஈடுபட்ட 29 வயதான பிரன்டன் டென்ட் என்பவர் தாம் 51 பேரை கொலை செய்தமையை ஏற்றக்கொண்டுள்ளார்.

அத்துடன் மேலும் 40 பேரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் இன்று இடம்பெற்ற விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் விசாரணைகள் ஆரம்பமானபோது இந்த குற்றச்சாட்டுக்களை பிரதிவாதி மறுத்திருந்தார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூஸிலாந்தில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய விசாரணையின்போது பொதுமக்கள் எவரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பிரதிவாதியின் சட்டத்தரணிகளும் காணொளியின் ஊடாகவே வாதங்களை முன்வைத்தனர். 2019 மார்ச் 15ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...