கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது - உலக சுகாதார அமைப்பு

Report Print Tamilini in சமூகம்

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 எனும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு சட்டத்தை அறிவித்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்தவொரு செயற்பாட்டின் மூலம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன் எச்சரித்துள்ளது.

வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதை தீவிரப்படுத்தினால் மாத்திரமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் அந்தானம் கேப்ரியசஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். கொரோனா வைரஸை அழிக்க இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல.

வைரஸை ஒழிக்க அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் மக்களை வீடுகளுக்கு முடக்கி வைத்துள்ளனர். சில நாடுகளில் காலவரையற்ற ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் வைரஸ் தீவிரம் அடைந்துள்ளமையினால் 21 ஆயிரத்து 297 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...