கொழும்பில் இன்று மரக்கறியால் ஏற்பட்ட குழப்ப நிலை

Report Print Tamilini in சமூகம்

கொழும்பு மெனிங் சந்தையில் இன்று காலையில் குழப்ப நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலையில் மரக்கறிகளை விற்பனை செய்வதன் காரணமாக சந்தைப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகமான மரக்கறிகள், கிலோ ஒன்று 250 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டமையே அதற்கு காரணமாகும்.

சந்தை கட்டடத்தொகுதிக்கு வந்த நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள், பொது வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

மரக்கறிகளுக்கு நிர்ணய விலையை தீர்மானித்ததன் பின்னர் ஒலிபெருக்கி மூலம் அதனை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவை கருதி மெனிங் சந்தை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...