வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் விநியோகம்!

Report Print Rusath in சமூகம்

கொவிட் 19 எனும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி,பட்டிருப்பு எருவில், ஓந்தாச்சிமடம், களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் வறுமை நிலையிலுள்ள அன்றாடம் கூலி வேலை செய்து தமது குடும்பத்தைப் பாதுகாத்து வரும் 500 குடும்பங்களுக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தனரம் வினோராஜ் உலர் உணவுப் பொருட்களை நேற்று வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊடரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவிருக்கின்றது.

Latest Offers

loading...