இத்தாலியில் இலங்கையர் எவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கவில்லை

Report Print Ajith Ajith in சமூகம்

இத்தாலியில் இலங்கையர் எவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி ரோமில் உள்ள இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

70 வயதான இலங்கையர் ஒருவர் முதியோர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா வைரஸூக்கு பலியானார் என்று நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் கொரோனா ரைவஸ் தொற்றுடன் எந்த இலங்கையரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் சுமார் 50 இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை தூதரகம் உறுதிசெய்துள்ளது.