கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 500 பேர் சமூகத்திற்குள் இருக்கலாம்!அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய எண்ணிக்கை 102 என அரசாங்கம் புள்ளிவிபரங்கள் கூறினாலும் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சுமார் 500 பேர் சமூகத்திற்குள் நடமாடி திரியலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் சமூக இடைவெளி பேணப்படாத காரணத்தினால்,பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அடுத்த 14 நாட்கள் முடியும் ஏப்ரல் 8 ஆம் திகதி அளவில் நாட்டுக்கு கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த சுமார் 19 ஆயிரம் பேர் வரை இருக்கின்றனர்.

இவர்கள் பாதுகாப்பு தரப்பினர், சுகாதார பிரிவினர் மற்றும் நிர்வாக பிரிவினர் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் மருத்துவர் சமந்த ஆனந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...