கிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் வர்த்தக நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்

Report Print Kumar in சமூகம்

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 06.00மணி தொடக்கம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்தது.

பொதுமக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் இன்று காலை முதல் நண்பகல் 12.00மணி வரையில் இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இதன் போது கிழக்கு மாகாணத்தின் பலபகுதிகளிலும் பொதுமக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவடடத்தில் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல பகுதிகளில் மக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவு செய்துவந்த அதேவேளை சில பகுதிகளில் அதனை மீறிய வகையில் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப் கள்ளியங்காட்டில் சதோச கிளையொன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் திறந்துவைக்கப்பட்டு அதன் மக்களுக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பகுதியில் பொதுமக்கள் சந்தைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல வங்கிகளில் ஏரிஎம்இயந்திரத்தில் பணத்தைப்பெறவதற்காகவும் பெருமளவிலான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

தகவல் - சகாதேவராஜா

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நகர்ப்பகுதியில் மக்கள் அதிகளவில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டடுள்ளனர்.

இதேவேளை எரிபொருள் நிலையங்கள்,மருந்தகங்கள் ,மொத்த சில்லறை வியாபார நிலையங்களில் அதிகளவிலான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸாரினால் கொரோனா வைரஸ் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள்,ஊரடங்கு சட்டம் தொடர்பிலும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வீதிகளில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல்- முபாரக், ஹஸ்பர்