சுதந்திர வர்த்தக வலையங்களை மூடுமாறு உத்தரவு

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மூடுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து ஊழியர்களையும் இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் பேருந்துகளில் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

கொரேனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த தொழிற்சாலைகளை மூட அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

தமது வீடுகளுக்கு செல்ல முடியாது சிக்கியுள்ள கட்டுநாயக்க, பியகமை, சீதாவாக்க ஆகிய பிரதேசங்களில் உள்ள சுதந்திர வர்த்தக வலையங்களில் தொழில் புரியும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் விடுதிகளில் இருப்பதாக சுதந்திர வர்த்தக வலைய பொது ஊழியர் சங்கம், ஜனாதிபதி, இராணுவ தளபதி கைத்தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட அதிகாரி இன்று தெரியப்படுத்தியுள்ளனர். இதற்கு அமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இவர்கள் வீடுகளுக்கு செல்லும் வரை பொலிஸார் மற்றும் அருகில் உள்ள விகாரைகளின் உதவியுடன் உணவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.