இருவருக்கு இடையில் இடைவெளியை பேணுங்கள்! சுகாதார அமைச்சு அறிவுரை

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கையாள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரண்டு நபர்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்தது ஒரு மீற்றராக இருக்க வேண்டும்.

வைரஸ் பரவலை தடுக்க இது பொருத்தமான நடவடிக்கை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சவர்காரத்தை பயன்படுத்தி கைகளை கழுவுதல், துப்பரவற்ற கைகளால் கண், மூக்கு, வாயை தொடாமல் இருப்பது, தும்மல் மற்றும் இருமல் ஏற்படும் போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்வது என்பன வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் அடிப்படையான விடயங்கள்.

சுகவீனம் இல்லாத ஒருவர் முகமூடியை அணிய வேண்டும் என சுகாதார அமைச்சு இதுவரை பரிந்துரைக்கவில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.