கிளிநொச்சி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோதுமை மா வழங்கிய இராணுவத்தினர்

Report Print Suman Suman in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், அன்றாடம் நாள் கூலிக்கு வேலை செய்து ஜீவனோபாயத்தினை நடாத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இவ்வாறு நாள் கூலிக்கு வேலை செய்து வாழ்க்கை நடத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல குடும்பங்களும் இதனால் ஜீவனோபாயத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக இராணுவத்தினர் கோதுமை மா வழங்கி வைத்துள்ளனர்.