பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை

Report Print Kumar in சமூகம்

ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கு உதவுவதற்காக அரசாங்க அதிபர் பணிமனையில் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.

தனி நபர்கள் மக்களுக்கு உதவ வேண்டுமாயின் இச்செயலணி மூலமாக உதவலாம் அல்லது செயலணிக்கான கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பு செய்தால் அப்பணத்திற்கு பெறுமதியான பொருள்கள் கொள்வனவு செய்து அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

இதனைத்தவிர நீங்களாக வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பிரதேச செயலகங்களில் சகல விபரங்களுடன் இயங்கி வருகின்றது.

அவர்களுக்கூடாகவே சகலருக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கம், இலங்கை வங்கி, கணக்கு இலக்கம் - 2719857 என்ற இலக்கத்தில் பணத்தினை வைப்பு செய்து உதவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.