யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பொது இடங்களில் கிருமி நாசினி விசிறும் பணிகள் முன்னெடுப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரம்பலை தடுப்பதற்காக பல இடங்களிலும் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி குருநகர் மற்றும் குருநகர் சந்தைப் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விசிறப்பட்டுள்ளன.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.