பொதுமக்கள் பொதுச்சந்தைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்: கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை

Report Print Arivakam in சமூகம்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் வேளைகளில் மக்கள் பொதுச்சந்தையை நாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டுமென கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்

ஊரடங்குச் சட்டத்தின் போது பொது மக்கள் சனநெரிசல் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சந்தை வளாகத்தினுள் எந்தப் பகுதியிலும் விற்பனை செய்ய முடியும்.

மரக்கறி வியாபாரிகள் மட்டுமன்றி உற்பத்தியாளர்களும் விற்பனை செய்து கொள்ள முடியும். எந்த விதமான வரிகளும் அறவிடப்படமாட்டாது.

நியாயாமான முறையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவேண்டும். பொது மக்கள் பொதுச்சந்தையை நாடுவதைக் குறைத்து கிராமங்களில் உள்ள சந்தையை நாடுவது மிகச் சிறந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.