கிளிநொச்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!

Report Print Murali Murali in சமூகம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினமும் நாள் கூலிக்கு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துபவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு - கிழக்கில் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சியின் கறுக்காய்த்தீவு, ஞானிமடம், சித்தன்குறிச்சி, மட்டுவில்நாடு மேற்கு, செம்ன்குளம், நெற்புலவு, பள்ளிக்குடா, செட்டியார்தரவெளி, தெளிகரை, காவக்குளம், செம்பன்குன்று ஆகிய இடங்களுக்கு சென்று உதவிபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தனால் இந்த உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நலன்விரும்பிகளிடம் இருந்து பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பலர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் அன்றாட உணவிற்காக வழியில்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தம்மாலான உதவிகளை சக்கர நாற்காலியில் சென்று பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் வழங்கி வருகிறார்.

அவர் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டப்படவேண்டிய விடயமாகும். எனவே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் தம்மால் முடியுமான உதவிகளை பிறருக்கு செய்வது அவசியமாகும்.

Latest Offers

loading...