முல்லைத்தீவில் பொதுச்சந்தைகள் பரவலாக்கம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - கரைத்துரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பொதுச் சந்தைகள் இன்று பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு குறுகிய நேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிகளவிலான பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதினால் சனநெரிசல் ஏற்படாதவாறு கட்டுப்படுத்துவதற்கு பிரதேச சபையினால் பொதுச்சந்தை வியாபாரிகளை 500 மீற்றர் தூர இடைவெளிக்குள் பரவலாக்கம் செய்துள்ளனர்.

இதன்படி புதுக்குடியிருப்பு, விசுவமடு, முள்ளியவளை ,தண்ணீறுற்று,மற்றும் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் பொதுச்சந்தை வியாபாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மரக்கறி மற்றும் மீன் வியாபார நடவடிக்கைகளை வியாபாரிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிராமங்களில் உள்ள பொது இடங்களில் விவசாயிகள் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த சபையினர் அறிவித்திருந்தமைக்கு அமைய கிராமங்களின் பொது இடங்களிலும் வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...