கொரோனா கட்டுப்பாட்டு நிதியம் முக்கியமான நடவடிக்கை - குணதாச அமரசேகர

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த விசேட நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை மிக முக்கியமானது எனவும் அதற்கு அனைத்து பிரஜைகளும் முடிந்தவில் பயங்களிப்பு வழங்க வேண்டும் என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மருத்துவர் லியோனிட் ரோஷல், கொரோனா வைரஸ் தொற்று நோய் உயிரியல் ஆயுத தாக்குதலாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரஷ்ய மருத்துவரின் நிலைப்பாட்டை ஒதுக்கி தள்ள முடியாது, நிரந்த நிதியம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு மேலதிகமாக உயிரியல் பாதுகாப்பு சட்டம் ஒன்றையும் நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் சுற்றாடல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் உயிரியல் தாக்குதல் அல்லது இயற்கை தொற்று நோய்கள் ஏற்படும் போது தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

எமது நாட்டில் காணப்படும் இந்த குறையை உடனடியாக போக்க வேண்டும் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...