கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்முனையில் விசேட நடவடிக்கைகள்

Report Print Varunan in சமூகம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் கல்முனை மாநகரசபையினால் இன்று காலை விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் கல்முனையில் அமைந்துள்ள பொது பேருந்து தரிப்பிடம், ஐக்கிய சதுக்கம் உட்பட பல பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் பொலிஸாருடன் இணைந்து கிருமிநாசினி தெளித்துள்ளனர்.

இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜயசுந்தர, மாநகரசபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, விசேட அதிரடிப்படை பிராந்திய பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுசங்க, இராணுவ பொறுப்பதிகாரி உட்பட சுகாதார உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மாநகரசபையில் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமான தகவல்கள், ஆலோசனைகளை பொது மக்கள் பரிமாறிக் கொள்ள முடியும்.

இத்தகவல் மத்திய நிலையத்திற்கென 0672059999, 0767839995 எனும் அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.