சமூர்த்தி பெறும் 23 லட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் உதவி தொகை

Report Print Steephen Steephen in சமூகம்

எதிர்வரும் செவ்வாய் கிழமை சமூர்த்தி உதவி பெறும் 23 லட்சம் குடும்பங்ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கி முடிக்க உள்ளதாக கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி உதவி பெறும் 23 லட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் செவ்வாய் கிழமைக்குள் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கி முடிக்கப்படும்.

இதனையடுத்து எதிர்வரும் புதன் கிழமையில் இருந்து மேலும் மூன்று அணியினருக்கு உதவி தொகையை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

முதியோர் கொடுப்பனவும், அங்கவீனமானவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் சமூர்த்தி பெற தகுதி உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.