ஊரடங்கு வேளையில் கஞ்சாப் பொதி கடத்திய நபர் கைது

Report Print Rakesh in சமூகம்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் 7 பொதி கஞ்சாவுடன் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை பளைப் பொலிஸார் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.