கொரோனா பற்றி பொய்யான தகவலை பரப்பிய மற்றுமொரு நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக கொரோனா வைரஸ் பற்றிய பொய்யான தகவல்களை பரப்பிய மற்றுமொரு நபர் குருணாகல், உஹூமிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழு இந்த நபரை கைது செய்துள்ளது.

இந்த நபர் தெஹிவளை, களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபர் எனவும் அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இன்று அதிகாலை வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனையிடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.