இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அருகில் உள்ள சுகாதார துறையினரை அணுகவும்

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொரோனா நோய் நிலைமை தொடர்பான தகவல்களை மறைக்காது தாமதிக்காமல் மருத்துவர்களுக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார துறையினரும், பொலிஸாரும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்ச் 10 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எவராவது இருப்பார்களேயானால், அவர்கள் அருகில் உள்ள பொலிஸ் மற்றும் சுகாதார துறையினரை அணுகுமாறு நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டின் சுகாதார பாதுகாப்பு குறித்து சந்தித்து இப்படியான நபர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.