சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்தியவரை நெறிப்படுத்திய நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் குற்றவியல் விசாரணை திணைக்களம் இன்று ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரியை நெறிப்படுத்திய பிரதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரையும் இந்த நபரே நெறிப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.குற்றவியல் விசாரணை திணைக்களம் 31 சந்தேக நபர்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் 60 சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் கத்தேலிக்க தேவாலயங்களில் காலையில் நடந்த தமிழ் திருப்பலி பூஜைகளை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.