அனுராதபுரத்தில் பின்தங்கிய மூன்று பிரதேச வியாபார தளங்கள் திறக்கப்படாது!

Report Print Ajith Ajith in சமூகம்

ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்படுகின்ற போதும் அனுராதபுரம் மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச வியாபார தளங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை தளர்த்தப்படும் ஊரடங்கு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்செய்யப்படும்.

எனினும் அனுராதபுரத்தின் கலேன்பிந்துனுவெவ, ஹொரவப்பொத்தான, கஹட்டகஸ்திஹிலிய ஆகிய இடங்களின் வியாபார தளங்கள் மூடப்பட்டிருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கண்டி - அக்குரனையை சேர்ந்தவர் இந்த இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையிலேயே, குறித்த மூன்று இடங்களின் வியாபாரத்தளங்கள் இன்று மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.