அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் திகதி அறிவிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் திகதியை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஓய்வுதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோரின் வீடுகளுக்கு கொண்டு சென்று பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கிராம சேவகரின் உதவியுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.