பாதுகாப்பு தரப்பினர் எடுக்கும் தீர்மானங்களில் தலையிடப்போவதில்லை!

Report Print Vanniyan in சமூகம்

வதந்திகளை பரப்புபவர்கள் மீதும், ஊரடங்கு விதிகளை மீறுகின்றவர்கள் மீதும் பாதுகாப்பு தரப்பினர் எடுக்கும் தீர்மானங்களில் அகில இலங்கை உலமா சபையோ, அம்பாறை மாவட்ட உலமா சபையோ தலையிடப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவரும், அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவருமான எஸ்.எச்.ஆதம்பாவா இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

தொடர்ந்தும் பேசிய அவர்,

நாங்கள் எதிர்பார்ப்பது பொதுமக்கள் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாகும். பொது மக்கள் ஊரடங்கு நேரங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் போது அதற்கான பொறிமுறைகளுக்கு ஊடாகவே வழங்குங்கள். உங்களுக்கு எதும் பிரச்சினைகள் ஏற்படுமானால் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அணுகுங்கள்.

ஆனால் தற்போது எமது பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வதந்திகளை பரப்ப சிலர் முயல்கின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.