கிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட சுத்திகரிப்புநடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு,அறிவியல்நகர் புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கை யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற நிலையில், குறித்த விசேட குழுவினர் கிளிநொச்சியில் இவ்வாறு விசேட சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.